யாழ். பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைளில் 62 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை, யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ப்பட்ட சுற்றிவளைப்புகளில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.