சிறு தவறுகள் தொடர்பில் சிறைப்படுத்துப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் 444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறசை்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல் தெனிய தெரிவித்துள்ளார்.
29 சிறைச்சாலைகளை சேர்ந்த் 18 பெண்கள் உட்பட 44 கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அவர்களுள் அதிகமானவர்களான 83 பேர் வெலிகட சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற தவறுகளுடன் தொடர்புடைய எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.