நாட்டிக் கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான MT New Diamond கப்பல் தொடர்பில் 340 மில்லியன் ரூபா நட்டம் கோரப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரினால் இந்த நட்டஈட்டு கோரிக்கைக்கான அறிக்கை MT New Diamond கப்பலின் உரிமையாளர்களது வழங்கறிஞ்சர் குழாமிடம் கையளிக்கப்பட்டுள்ளது..
MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும், அது சார்ந்ததாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக ஏற்பட்ட செலவீனங்களை அடிப்படையாக கொண்டு இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பெருமளவு தொகையான மசகு மற்றும் டீசல் ஆகியவற்றை ஏற்றிவந்த MT New Diamond கப்பல் இலங்கையின் கிழக்கு கடற்ப்பரப்பில் தீப்பரவலுக்கு உள்ளானது.
இந்நிலையில், இலங்கை கடற்படை உள்ளிட்ட 15 திணைக்களங்கள் ஒன்றினைந்து பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் கப்பலின் தீப்பரவலை கட்டுப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.