திருகோணமலை - சேருவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 30 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீமங்கலபுர, சேருநுவர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
30 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் சந்தேக நபர் அவரின் வீட்டுக்குள் புகுந்து வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். பின்னர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட 30 வயதுடைய பெண்ணின் கணவன் இராணுவ படைப் பிரிவில் கடமையாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.