இவரும், செங்குன்றம் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி (வயது 22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது மித்ரன் என்ற ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 02 நாட்களுக்கு முன்னதாக கு ழந்தை மித்ரனை பாக்கியலட்சுமி அடித்த நிலையில், இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், குழந்தையை அடித்ததற்கு மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.
மேலும், வாக்குவாதத்தில் பாக்கியலட்சுமியை அடித்தும்முள்ளார். இதனால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று காலை நேரத்தில் ரஞ்சித்குமார் வழமை போல் வேலைக்கு சென்றுவிட்டார்.
இந் நிலையில் வீட்டில் குழந்தையுடன் இருந்த பாக்கியலட்சுமி மாலை வேளை கணவருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன் பின்னர் வேலை முடிந்ததும் வீட்டிற்கு சுமார் 7 மணியளவில் வந்த ரஞ்சித், வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டுள்ளார்.
நீண்ட நேரம் கதவை தட்டியும் பலனில்லாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், குழந்தையும், பாக்யலட்சுமியும் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.