நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, 20ஆம் திருத்தம் மூலம் நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் மட்டுமே வழங்கப்பட்டு நாட்டை ஒரு சகாப்தத்திற்கு பின்னோக்கி எடுத்துச்செல்ல தற்போதைய அரசாங்கம் முயல்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் பழங்குடித் தலைவர்களால் விதிகள் வகுக்கப்பட்டன. இது தற்போது நாடாளுமன்றத்தின் பணியாக உள்ளது.
நிறைவேற்று அதிகாரங்கள், தவறுகளுக்கு உறுப்பினர்களை தண்டித்தல் மற்றும் அது நடக்கும் முறையை தீர்மானித்தல், அவை நீதித்துறையால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவை ஜனாதிபதியால் நடத்தப்பட 20ஆவது திருத்தம் வழிவகுக்கிறது என அனுரகுமார குறிப்பிட்டார்.
இது ஜனநாயகத்திலிருந்து ஒரு பழங்குடி சகாப்தத்திற்கு நகர்வதை குறிக்கிறது என்று அவர் எச்சரித்தார்.
எனவே 20ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், மக்களுக்கும் தகுதியற்றது, அதனால் தமது கட்சி அதை எதிர்க்கும் என்றார்.
நாட்டின் நிர்வாகம் மற்றும் நீதித்துறையை ஜனாதிபதி கட்டுப்படுத்தும் விதமாக 20ஆவது திருத்தம் தொகுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
20ஆவது திருத்தத்தின் மூலம் பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர் ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது என்றார். முன்னர் அரசியலமைப்பு சபை இந்த விடயங்களை கையாண்டது. .
சட்டமன்றம் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை தலைமையில் இருந்தது. எனினும், தற்போது சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அமைச்சுக்களிற்கு நியமித்து நீக்குவதற்கான அதிகாரங்களும் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன என்றார்.