அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைவில் சில திட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் இருந்து போட்டியிட்டு பாராளுமன்ற ஆசனத்தை வென்ற ஸ்ரீலங்கா மக்கள் கட்சி உறுப்பினரான அசங்க நவரத்ன, 20ஆவது அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட வரைவில் சில அம்சங்கள் நாட்டிற்கு எதிரானவை என தெரிவித்தார்.
"20ஆவது திருத்தம் ஒருவரின் தனிப்பட்ட தேவைக்காக அவசரமாக தயாரிக்கப்பட்ட ஆவணம் போல் தோன்றுகிறது" என அவர் குற்றம் சாட்டினார்.
இந்தத் திருத்தத்தை அவசரப்படுத்தாமல் அரசாங்கம் தாமதப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.