20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த மனுக்கள் இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், 20ஆவது அரசியலமைப்புதிருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இதுவரை 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, அரசியலமைப்பு திருத்த சட்டவரைபுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கான கால எல்லைநாளையுடன் நிறைவடைகின்றது.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டவரைபினை நீதி அமைச்சர் அலி சப்ரி கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதன்படி குறித்த சட்டவரைபுக்கு ஆட்சேபனை தெரிவித்து மனுதாக்கல் செய்வதற்கான கால எல்லையாக 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.