அமெரிக்காவிலிருந்து 18 இலங்கையர் நாடு கடத்தப்பட்ட நிலையில், நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட 21 நாட்களை முடித்தவுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவர்களிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.