கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டில் சிக்கித்தவித்த 164 இலங்கையர்கள் விஷேட விமானங்களின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு, வவுனியா வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இன்று (05) தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 164 பேர் தமது சொந்த இடங்களுக்கு கொரோனா தொற்றில்லையென உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிங்கப்பூர் நாட்டிலிருந்து வருகை வந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து அவர்களது சொந்த இடங்களான மாத்தறை, காலி, கொழும்பு, கண்டி, பேராதெனியா, மாத்தளை அனுராதபுரம் போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.