தெற்கில் உள்ள மிகவும் ஏழ்மையான பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்திடம் எவ்வித சம்பளமும் பெறாமல் 16 வருடங்களாக தன்னார்வமாக கற்கும் ஆசிரியர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
மாத்தறை - தெனியாய பிரதேசத்திலேயே இந்த ஆசிரியர் கற்பிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
எம்.ஜீ.கமல் பிரசன்ன என இந்த ஆசிரியர் 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி முதல் தொடர்ந்து 16 வருடங்களாக தன்னார்வமாக அவர் பணியாற்றி வருகின்றார்.
பௌத்தம், சித்திரம், வரலாறு, விவசாயம் போன்ற பாடங்களை அவர் கற்பித்து வருகின்றார். பாடசாலை சித்திகளை அதிகரிப்பதற்காக அவர் பாரிய உதவிகளை அவர் செய்த வருகின்றார்.
காலில் உபாதையுடன் வாழும் அவர் தனது சேவைக்கு உபாதையை ஒரு தடையாக கருதாமல் மாணவர்களுக்காக மிகப்பெரிய சேவையை அவர் செய்து வருகின்றார்.
பல்வேறு தகுதிகளை கொண்ட அவருக்கு இதுவரையிலும் எவ்வித நிரந்தர தொழிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தனது 16 வருட சேவையை கருத்திற் கொண்டு குறித்த பாடசாலையில் தனது நிரந்தர ஆசிரியர் பதவியை பெற்றுக் கொடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.