மாவனல்லை, கனேதென்ன - உதயமாவத்தை பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய சிறுமியொருவர் கழிப்பறை குழியொன்றில் வீழ்ந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இன்று (27) காலை 9.00 மணியளவில் குறித்த சிறுமி வீட்டு முற்றத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மூடிய கழிப்பறை குழியின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொங்ரீட் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுமியும் உள்ளே வீழ்ந்துள்ளார்.
இதன்போது, பதட்டமடைந்த சிறுமியின் தாய் காப்பாற்ற முயன்றுள்ளார். பின்னர் பிரதேச மக்களின் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். எadsவ்வாறாயினும், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
$ads={2}
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாவனல்லை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.