கடந்த செப்டெம்பர் 02ஆம திகதி பஹ்ரைனிலிருந்து வந்த 60 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.
சிலாம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
$ads={1}
கடந்த செப்டெம்பர் 02ஆம் திகதி பஹ்ரைனிலிருந்து வந்த குறித்த நபர் கடல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர் எனவும் இலங்கை வந்த அவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்படாத நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த செப்டெம்பர் 09ஆம் திகதி சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர் இன்றைய தினம் (14) மரணமடைந்துள்ளார்.
அவரது மரணத்திற்கான நெருங்கிய காரணம் மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.