இலங்கையில் சுகாதாரப் பாதுகாப்பு நூறு சதவீதம் உறுதிப்படுத்தப்படும் வரையில், நாட்டிலுள்ள விமான நிலையங்கள் திறக்கப்படமாட்டாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் கொரோனா வைரஸை முற்றாக ஒழிப்பதற்கு சுகாதார தரப்பினர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்படி நாட்டில் வாழும் 2 கோடியே 20 இலட்சம் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு நூறு சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டு, அது தொடர்பாக சுகாதாரத் தரப்பினர் ஆலோசனைகளை வழங்கும் வரையில் விமான நிலையங்களைத் திறக்க எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டார்.
உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இந்தக் காலப்பகுதியில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு மாத்திரம் இலங்கை வரக்கூடிய வகையில் விசேட விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.