ஹப்புத்தளை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 08 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (19) முற்பகல் தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய போதே அவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் ஹப்புத்தளை - பங்கெட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.