2020 மார்ச் 19 முதல் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதிக்கு தடையினை தொடர்ந்து, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் துணைச் செயலாளர் பிரசாத் குலதுங்கா கூறினார்.
இதன் விளைவாக, பதிவு செய்யப்படாத வாகனங்களின் விலை ரூ. 1 மில்லியன் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலையும் மதிப்பிடப்பட்டபடி அதிகரித்துள்ளது, என்றார்.
ஜனாதிபதியின் செயலாளர் P.B ஜயசுந்தர, தற்போது இறக்குமதி செய்யப்பட்டு கையிருப்பில் இருக்கும் வாகனங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு போதுமானது என வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாகவே வாகன இறக்குமதியாளர் சங்கம் இந்த கருத்து தெரிவித்தது.