ஏக்கல பகுதியில் அமைந்துள்ள லக்திவ பொறியியல் நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, எதிர்காலத்தில் பேருந்துகளை இறக்குமதி செய்யாது, செஸி மற்றும் எஞ்சின் போன்வற்றை மாத்திரம் இறக்குமதி செய்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு தேவையான பேருந்துகளை நாட்டிலேயே தயாரிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேருந்தொன்றை தயாரிப்பதற்கு லக்திவ பொறியியல் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களுக்கு சுமார் நான்கு மாதங்களே தேவைப்படுவதாக போக்குவரத்துத் துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து அமைச்சின் கீழ் செயற்படும் அரச நிறுவனமான லக்திவ பொறியியல் நிறுவனத்தின் ஊடாக, தற்போது பழைய பேருந்துகளை புதிதாக உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.