அபுதாபி நகரின் ரஷீத் பின் சயீத் தெருவில் உள்ள KFC மற்றும் Hardees உணவகங்களில் இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது, பக்கத்தில் இருக்கும் ஏனைய சில சில்லறை விற்பனை நிலையங்களும் சேதமடைந்துள்ளன.
இந்த வெடிப்பு சம்பவத்தில் மூவர் பலியாகியுள்ளதுடன் மேலும் பலருக்கு சிறிய மற்றும் மிதமான காயங்கள் ஏற்பட்டதாகவும், கட்டிடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அபுதாபி பொலிஸார் தெரிவித்தனர்.
ரஷீத் பின் சயீத் தெரு விமான நிலைய சாலை என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் உயர் உதவியாளர்கள் இஸ்ரேலுக்கும் மற்றொரு அரபு நாட்டிற்கும் இடையிலான வரலாற்று பயணத்தில் எதிர்வரும் திங்களன்று வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.