போதுமான அளவு பால் உற்பத்தி இல்லாமையினாலும் அனைத்து மாணவர்களின் நன்மையினை கருதியும் இந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே மற்றும் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மந்தப்போசனை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவதனாலும் மாணவர்களுக்கு உரிய வயதில் அவர்களுக்கான போசாக்கு உடலில் சேர்க்கப்படவேண்டும் என்பதாலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.