![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij85S3XBkwCaR4DS4VOFRL_vwoiyGw2QGRCxGYpR9rHoiBSbbkrhxmiJaT0QDiPXLNLR_o0DjAZ_ZgJfjlMY9xSwqZEq32knxV5IRl6huuKxG8mtNEeXABdPkpwQGXRackkc-OTE_VSCI/s1600/5e4bdd2cb8810_5e4bd7ab31ac4_5e4bc6cad4168_moee+%25281%2529.jpg)
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் தற்போதைய நிலைமையினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 200 இற்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய தினம் குறித்து கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பாடசாலைகளை நடாத்திச் செல்ல முடியுமானால் வழமைபோன்று மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லையென கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.