இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய, காவத்தை ஆகிய நகரங்களில் இவ்வாறு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத, எந்தவித உத்தரவாதமும் அற்ற கிறீம் வகைகள் மற்றும் திரவங்கள் என்பனவற்றை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் மூலம் கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, இத்தகைய கிறீம் வகைகளை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஆறு இலட்சத்திற்கும் அதிகமான இத்தகைய கிறீம் வகைகள் மற்றும் திரவங்கள் என்பவற்றை கண்டுப்பிடித்துள்ளனர்.
மேற்படி உத்தரவாதமற்ற கிறீம் வகைகள் மற்றும் திரவங்களை விற்பனைக்கு வைத்திருந்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலணி லொக்குபோத்தாகமவின் ஆலோசனைக்கமையவே மாவட்ட நுகர்வோர் அதிகார சபை பொறுப்பதிகாரி உதய நாமல்கம தலைமையில் மேற்படி பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.