அதன்படி, இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,953 ஆக அதிகரித்துள்ளது.
மலேஷியாவில் இருந்து வந்த இருவருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கும், கென்யாவில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் துபாயில் இருந்து வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் மேலும் 07 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ள நிலையில் இதுவரை 2,805 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் தற்பொழுது 136 பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்றைய தினம் IDH வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளர் ஒருவர் உயிரிழந்தார்.
அதன்படி, இந்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.