கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 10 கைதிகளுக்கும், கென்யாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும், மேலும் மாலைதீவில் இருந்து நாடு திரும்பியவர்கள் இருவருக்கும் என சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தோற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,984 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,819 ஆக காணப்படுகின்றது.
அதுபோன்று, பாதிக்கப்பட்ட 153 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் பலியானதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளது.