தென்னிலங்கையில் பேஸ்புக் விருந்து நடத்திய பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி - அக்மீமன பிரதேச ஹோட்டலில் இந்த விருந்து நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய நண்பர்களுடன் நடந்த இந்த விருந்தில் 2 பெண்கள் உட்பட 28 இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.