உத்தியோகப்பூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்றுமாத காலப்பகுதிக்குள் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒரு சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உத்தியோகப்பூர்வ இல்லங்கைளை கடந்த மே மாதம் ஒப்படைத்துள்ளதாகவும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் 22 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எட்டாவது நாடாளுமன்றத்தின் அனைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது உத்தியோகப்பூர்வ இல்லங்களை ஒப்படைத்துள்ளதாகவும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.