ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போது விக்னேஷ்வரன் வடமாகாண முதலமைச்சர் அல்ல. அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் சம்பந்தனைவிட தானே தமிழ் மக்களின் வீரர் என்பதை வெளிக்காட்டவே முயற்சிக்கின்றார்.
மேலும், அவர் புலம்பெயர்ந்தோரின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தும் வகையிலேயே செயற்படுகின்றார். அதனால் மகாவீரர் போன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றார்.
அவருடைய கருத்துக்களுக்கு நாங்கள் முழு எதிர்ப்பையும் தெரிவிக்கின்றோம். அத்தோடு இலங்கையின் மூத்த குடிமக்கள் சிங்களவர் மற்றும் இந்த நாட்டின் முதல் உரிமை சிங்களவர்களுக்கு இருக்கின்றதென்பதை நிரூபிப்பதற்கு அவருடன் விவாதம் புரிய தயாராக இருக்கின்றோம்.
இதேவேளை, நாங்கள் தமிழ் மக்களுடன் இணைந்து சமாதானத்துடன் செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோம். இந்த நிலையில் விக்னேஷ்வரன் தெரிவிக்கும் கருத்துக்களினால் இந்த நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள சகோதரத்துவத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.