இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகக் கவசம் அணியாமல் கடமையில் ஈடுபடும் பஸ் ஊழியர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் குற்றவாளியாகும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பு தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பஸ் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சட்டத்திட்டங்கள் இதுவரையில் செயற்படுத்தப்படுவதில்லை என கூறப்படுகின்றது.
இந்த சட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்காக தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.