1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்துக்கமைவாக, ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள தத்துவத்தின் படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் துணைவேந்தர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.