![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1vUArg35mM8gTQFp-1_pr3T5vgV4nalkLG6oPJdl5WGLkUn44U-DfV8dRMyU8O0L9mpiiemm6d3zXvlXP2wnf9NZju1nMMiBpfCTO44WZMf05vmL8sX7eggq9jJGPpCq8Jm1eQ20YwHY/s640/7E546991-A1CE-415A-AE77-A2D4B2F16142.jpeg)
ராஜாங்கன பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக அந்தப் பகுதி சுகாதார வைத்திய அதிகாரி சந்தியா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
ராஜாங்கன யாய 5 நவோத்யா வித்தியாலயத்தில் 11ஆம் வகுதிப்பில் கற்கும் 16 வயதுடைய மாணவனுக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்த பிரதேசத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டிற்கு முன்னால் இந்த மாணவன் வசித்து வருகின்றார்.
பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 102 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் 101 பேர் ஆரோக்கியமாக உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான மாணவன் சிரி செவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
$ads={1}
எனினும் ஏனைய பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லை என தம்புத்தேகம கல்வி வலய இயக்குனர் ஜீ.கே.ஆர்.எம்.கே.பண்டார தெரவித்துள்ளார்.