![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimo1lJia6kK_yLgSGIQpeQ75YpmvAoMCdcMITzCF87z0XbQgG9nuwjrkufWbtstSHwSI_Acsvmis-T67g56yVHZ9smJDwsUuyXYRgtsNXV1Z7yksJPFnYnF4RFyhrundcu1gSoeccL7KQ/s1600/1567621455-No-room-for-violence-in-Quran-Ali-Sabry-L.jpg)
அதனை முஸ்லிம் சமூகத்தினர் பெரிதும் விரும்புகின்றார்கள். கடந்த காலத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர், என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்காக முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமயிலான குழுவினர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை தயாரித்துள்ளனர். அதேபோன்று இந்தச் சட்டத்தினை திருத்துவதற்கான வரைபும் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மிக விரைவாக முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் உரிய திருத்தங்களுடன் நிறைவேற்றப்படவுள்ளது. இதில் முஸ்லிம் சமூகத்தின் சம்பந்தத்துடன் அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது நிறைவேற்றப்படவுள்ளது என தெரிவித்திருந்தார்.