![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6rodbt0-wXksZ0hxsW6eSnBsQCPd4R7lffE1cApZ1sRC43ZUyf8KURs4nClA3u5IXeAdDKl9VtTfYyHhU_DLr2i9NpRddCfWN9cjuEMNMkPgs6aw34B-ujmHka_w3A3Mf59BpY4n1y3U/d/tttttttttt.jpg)
அதன்படி, எதிர்வரும் அக்டோபர் 01ஆம் திகதி முதல் அதன் அனுமதி பெறாத இடங்களிலிருந்து கொள்வனவு செய்யப்படும் மொபைல் போன்களுக்கான தொலைபேசி இணைப்பிற்கு (sim card) சேவை வழங்குவதை இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
பொதுமக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் மொபைல் போன்களுக்கான தொலைபேசி இணைப்புகளை எவ்வாறு பெறுவது என்று பலர் விசாரித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தனது ட்விட்டர் பதிவில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் மொபைல் போன்களை பதிவு செய்வதற்கான ஆன்லைன் முறையை விரைவில் அறிமுகப்படுத்தப்போவதாகக் கூறியுள்ளது.
தொலைபேசி சேவை வழங்குனர்கலுடன் மொபைல் ஃபோன்களின் (சிம் இயக்கப்பட்ட) இணைப்பு சேவை விரைவில் நிறுத்தப்படும் எனவும் அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது பயன்பாட்டில் உள்ள சிம்களைக் கொண்ட (சிம் இயக்கப்பட்ட) மொபைல் போன்களுக்கு இந்த முடிவு பொருந்தாது எனவும் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3qrGvuRatJJB-VX2PyZvJhKp0sADlaF8Nv5HRAuncttPTkpKZ6PUghLU8m0PP5uN0_z3EPEvTP9aPQPiNWgVyKGbVnj_nV_5aKkhHHU8pXYIjRSbMtMpd4B-m3KwC3ZJ4NK8IbpVfQM0/s1600/F6D8C6DF-CB45-4FAE-B8C5-2900AFD388EB.jpeg.jpg)