இலங்கையில் தொழிலாளர் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொழில் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், ஊழல் சேமலாப நிதி சட்டத்தின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்படாத வழக்குகளை தொழில் மத்தியஸ்த சபையிடம் தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தொழில் மத்தியஸ்த சபை வழங்கும் உத்தரவை அமல்படுத்தும் வகையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் பணிக்கொடை கட்டளை சட்டமும் திருத்தப்படவுள்ளது.
பணிக்கொடை தொடர்பிலான வழக்குகளையும் தொழில் மத்தியஸ்த சபைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பார்கப்படுகின்றது.
ஊழியர்களின் இழப்பீட்டு கட்டளைச் சட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் 550,000 ரூபா இழப்பீடு 2 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா கூறியுள்ளார்.