ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லிவினால் அரச அச்சக திணைக்களத்தின் உரிய அதிகாரிகளுக்கு இந்த விடயம் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரச அச்சக திணைக்களத்தின் முன்னேற்றங்களை ஆராயும் நோக்கில் ஊடகத் துறை அமைச்சின் உள்ளக அரங்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தபால் முத்திரைகள், வாக்காளர் அட்டைகள் மற்றும் வீசா ஸ்டிக்கர் உள்ளிட்ட பாதுகாப்பு முத்திரைகள் அரச அச்சக திணைக்களத்தின் ஊடாக தற்போது அச்சிடப்படுகின்றன.
அத்துடன், அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் 50 வீதமான அச்சு நடவடிக்கைகளும் அரச அச்சக திணைக்களத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையிலேயே, வெளிநாட்டு அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய அரச அட்டைகளை அச்சிடும் நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் அரச அச்சக திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது