இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளானவர்கள் அனைவரும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னரே குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்த அனைவரும் நாட்டிற்கு விரைவில் அழைத்து வரப்படுவார்கள் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.