![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnRTFYs43CAhA4Wpr851EpF133DFWF-m39PhQP0NnVTPwG0B26sUrpajwXJITns1g54K9PWFx-S2LuvEIg3WUATtRBfDSzwteHOssN8ZFqTbHCZgyCbQhmcgcdOyZ4_1QPKGCQvwmfpOk/s640/Ali-Sabry.jpg)
கண்டியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”நாட்டு மக்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பும் எமது முயற்சியை சிலர் விரும்பவில்லை. இதற்கு காரணம் என்னவெனில் அவ்வாறானவர்கள் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி தீவிரவாதத்தை முன்னெடுக்க வேண்டும்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவ தீவிரவாதம் தொடர்பிலான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நான் நீதி அமைச்சர் என்ற ரீதியில் செயற்படுவேன். நாம் ஒரு சமூக பிரிவினர் இந்த நாட்டை நாம் நேசிக்கின்றோம்.
யாராவது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டிருப்பார்களாயின் அவர்களின் இறுதி வரையில் உள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.” என தெரிவித்துள்ளார்.