எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதற்கு முன்னர் ஒக்டோபர் மாதம் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதிக்கு கூடிய அதிகாரங்களை கிடைக்கும் வகையில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உத்தேச 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஆராய அரசாங்கம் குழு ஒன்றை நியமித்தது.
அந்த குழு தற்போது குறித்த விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.