அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் இரத்து செய்யப்படுவதுடன் 13ஆவது திருத்தமும் இரத்து செய்யப்பட வேண்டும் என அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டுவருகின்ற போதும் 13ஆவது திருத்தத்தின் நோக்கம் மாகாண சபை தேர்தலில் தங்கியுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்தோடு மாகாண சபைகள் இல்லாமல் மாகாணங்களின் நிர்வாகம் ஜனாதிபதியின் பிரநிதியான ஆளுநர்களினால் முன்னெடுக்கப்படுவதால் மாகாண சபை முறைமையை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்தாலும் 13ஆவது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்ய முடியாது என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இந்தியாவின் தலையீட்டினால் 13ஆவது திருத்தம் உருவாக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் அவர்கள் இலங்கையின் நட்பு நாடாக இருப்பதனால் இந்த விடயத்தின் தீவிரத்தன்மை குறித்து அவதானம் செலுத்துவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து உரிய காலத்தில் இடம்பெறவிருந்த மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டது என குற்றம்சாட்டிய வாசுதேவ நாணயக்கார இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முழுமையான ஆதரவு வழங்கியது என்றும் தெரிவித்தார்.