மல்வத்து, அஸ்கிரிய தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை திருத்துவது குறித்தும் அமைச்சர்கள் கவனம் செலுத்தவில்லை என கூறினார்.
புதிய அரசியலமைப்பிற்கான பேச்சுவார்த்தைகளின் போது மாற்றங்களை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
மேலும் குறித்த சந்திப்பின்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் நாட்டை மீட்பது மற்றும் வருங்கால சந்ததியினரை துஷ்பிரயோகம் மற்றும் சிறுவயது திருமணங்களிலிருந்து பாதுகாப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.