இன்று அதிகாலை உயிரிழந்த குறித்த பெண் கடந்த 20ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
யட்டிவல பகுதியை சேர்ந்த ராசிதீனன் பாத்திமா ரிஸானா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL 1126 என்ற விமானம் மூலம் அவர் இலங்கை வந்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் இரனவில தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரொனா தொற்றியமை உறுதியாகியுள்ளது. அதனை தொடர்ந்து 22ஆம் திகதி அவர் கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர் சிசிக்சை பெறுவதற்காக இந்தியா சென்றுள்ளார். மேலும் அவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் தகன நடவடிக்கை இன்று கொட்டிகாவத்தையில் இடம்பெறவுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவரது கணவர் இறுதி அஞ்சலி செலுத்த இராணுவத்தினரின் அனுமதியுடன் வருகைத்தரவுள்ளார் என கூறப்படுகின்றது.