
யாழ் நியூஸ் வழங்கும் கவிதைப் போட்டி - 2020!
இலங்கையின் வளர்ந்துவரும் தமிழ் செய்திச் சேவையான யாழ் நியூஸின் முதற்கட்ட முயற்சியாக Gulf Ceylon மற்றும் Lanka Restaurant இன் பிரதான அனுசரணையில் நடாத்தும் எமது வாசக பெருமக்களுக்கான வயது கட்டுப்பாடற்ற கவிதைப் போட்டி!
கவிதை தலைப்பு:
1. கொரோனா (கோவிட்-19)
2. கறுப்பு - தொப்பி (இனவாதம்)
மேற்குறிப்பிட்ட இரு தலைப்புகளிலிருந்து உங்களுக்கு விருப்பமான தலைப்பினை தேர்ந்தெடுக்கலாம்.
போட்டி விதிமுறைகள்:
1. கவிதைகள் குறைந்தது இருபத்தி நான்கு (24) வரிகளை கொண்டதாகவும் 28 வரிகளுக்கு கூடாமலும் அமைந்திருத்தல் வேண்டும்.
2. ஒருவர் இரண்டு கவிதைகள் வரை அனுப்பி வைக்கலாம். (வெற்றியாளராகும் பட்சத்தில் இரு கவிதைகளில் மிகச்சிறந்த கவிதை தேர்ந்தெடுக்கப்படும்.)
3. தலைப்பினை மையமாக வைத்தே ஒவ்வொரு கவிதையும் அமைந்திருக்க வேண்டும்.
4. கவிதையில் கடைசியில் உங்கள் பெயர்/புனைப்பெயர் மற்றும் தொலைபேசி இலக்கத்தினை குறிப்பிடவும்.
5. கவிதைகள் சொந்த வரிகளாக இருப்பது மிக முக்கியமான போட்டி விதிமுறைகளில் ஒன்றாகும். அதனை மீறும் பட்சத்தில் போட்டியாளர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.
6. கவிதைகளை தமிழில் தட்டச்சு (Type) செய்து அனுப்பி வைப்பது வரவேற்கத்தக்கது. தெளிவான கையெழுத்தில் எழுதியும் புகைப்பட வடிவில் அனுப்பி வைக்கலாம்.
7. பங்குபற்றும் அனைத்து போட்டியாளர்களின் கவிதைகளும் எமது நடுவர் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, தரமான ஐம்பது (50) போட்டியாளர்களின் கவிதைகளை எமது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கம் (Facebook Page) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவிடப்படும்.
8. Facebook மற்றும் Instagram இல் அதிகளவு 'Likes' மற்றும் 'Shares' களை பெறும் கவிதைகளுக்கும் பணப்பரிசில்கள் காத்திருக்கின்றன.
👏சிறந்த கவிதைகளுக்கு வெகுமதியாக பணப்பரிசில்கள் காத்திருக்கின்றன.
முதல் பரிசு - ரூ. 10,000
இரண்டாம் பரிசு - ரூ. 7,000
மூன்றாம் பரிசு - ரூ. 5,000
அதிகளவான 'Likes' - ரூ. 2,500
அதிகளவான 'Shares' - ரூ. 2,500
தலா ரூ. 1,000 வீதம் மேலும் 10 ஆறுதல் பரிசில்கள்.
🗣பிரபல கவிஞர், அன்சார் எம். ஷியாம் அவர்களின் வழிகாட்டலுடன் சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.
👉கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டிய இறுதித் திகதி 20-06-2020 ஆகும்.
👉முகநூல் மற்றும் வாட்ஸாப் வாயிலான வாக்களிப்பு தொடர்பான தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
கவிதைகளை பின்வரும் வழிகளில் எமக்கு அனுப்பி வைக்கமுடியும்.
+97474746361 எனும் யாழ் நியூஸின் உத்தியோகபூர்வ வாட்ஸாப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம்.
அல்லது
“Yazh News - யாழ் நியூஸ்” எனும் எமது முகநூல் பக்கத்திற்கும் Message செய்யலாம்.
போட்டி சம்பந்தமான ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் +97474746361 எனும் இலக்கத்திற்கு வாட்சப் செய்யுங்கள்.
குறிப்பு: நீங்கள் அனுப்பி வைக்கும் கவிதைகள் , போட்டியினுல் உள்வாங்கப்பட்ட பின்னர் திருத்தங்கள் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. நன்றாக சரிபார்த்த பின்னர் எமக்கு அனுப்பி வைக்கவும்.
எமது பிரதான அனுசரணையாளர்கள்:
இணை அனுசரணையாளர்:
ஊடக அனுசரணையாளர்:
-யாழ் நியூஸ் நிர்வாகம்
