எனினும் இது பற்றி பேச அநேகமானவர்கள் அஞ்சுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டி, யட்டிநுவர தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள தெஹியங்கவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
கடந்த வருடம் இடம்பெற்ற மிலேச்சத்தனமான ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் காரணமாகவே முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு அச்சமான, பீதியான சூழலை உருவாக்கியுள்ளது.
அவர்களின் எதிர்கால வாழ்வு தொடர்பில் ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இந்த செயலை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை.
இஸ்லாமிய உலமாக்கள் கூட இந்த பாதகச்செயலில் ஈடுபட்டவர்களின் பிரேதங்களை தொழுகை நடத்தி அடக்கம் செய்வதற்குக்கூட அனுமதிக்க, முன்வரவில்லை.
ஆனால் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் இன்று வரை எம் சமூகத்திற்கு எதிரானதாகவே கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நிலையில் மீண்டும் எம் சமூகத்தை குறிவைத்து ஒரு படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளை இதில் சம்பந்தப்படுத்தி பொய்யான செய்திகளை பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் கொண்டுசெல்வதில் சில இனவாத ஊடகங்கள் முன்னின்று செயற்படுகின்றன.
இது வேண்டுமென்றே புனையப்படுகின்ற செய்தியாகும். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றவர்கள் இந்த சமூகத்தில் தாராளமாக இருக்கின்றார்கள் என்று ஒரு மாயையை கட்டவிழ்த்து விடுகின்ற செயலாகும்.
பௌத்த சிங்கள வாக்குகளை பெற்றுக்கொள்ள மேற்கொள்ளப்படுகின்ற சூழ்ச்சியாகும்.
இனவாத செயற்பாடுகளில் முன்னின்று செயற்படுகின்ற தீவிர போக்கை கொண்ட ஒரு பிக்கு அடிக்கடி ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இது தொடர்பில் அடிக்கடி முறையீடு செய்வதனை காணமுடிவதாகவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.