குறிப்பிட்ட நபர் தற்கொலை செய்துகொண்டார் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் தற்கொலைக்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதால் அவர் அந்த முடிவை எடுத்தாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னுடன் உரையாடிய சட்ட்த்தரணிகள் பலர் இது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற தேசிய சட்டத்தரணிகள் சங்கத்துடனான சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் முன்னாள் முகாமையாளரான ரஜீவ ஜெயவீர துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார், அவரது சடலத்திற்கு அருகில் கடிதமொன்றும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.