
சர்ச்சைக்குரிய MCC ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திடாது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
பொது தேர்தலை முன்னிட்டு நேற்று (19) மாலை பெல்லன்வில ரஜமஹா விஹாரையில் தேரர்கள் முன்னிலையில் மனசாட்சியின்உறுதி மொழியை வழங்கிய பின்னர் அமைச்சர் இதனை கூறினார்.
பெல்லன்வில ரஜமஹா விஹாரைக்கு சென்ற தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விகாராதிபதி உள்ளிட்ட தேரரர்களின் நலம் தொடர்பில் விசாரித்தார்.
அதன் பின்னரே 19 விடயங்கள் உள்ளடங்கிய தனது மனசாட்சியின் உறுதி மொழியை தேரர்களிடம் கையளித்தார்.