
சில மாதங்களுக்கு முன்பும் இலங்கைக்கு வந்த சேதுபரன் பாதுகாப்பு படையினரால் பல சந்தர்ப்பங்களில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக நோர்வே செல்ல தாமதமாகி, இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் கட்டார் விமான சேவையிலேயே இவ்வாறு நோர்வே செல்ல முற்பட்டுள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்றும், அவரிடமிருந்து காவல்துறை அறிக்கை பெற வேண்டியுள்ளதாகவும் விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி அவர் அதிகாலை 2 மணியளவில் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.
அரியகுனராஜா செல்வா என்ற யாழ்ப்பாணத்தில் வசித்து வருபவர் அளித்த புகாரைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.