கருணா கூறியதை அலட்டிக்கொள்ள தேவையில்லை; அவர் இல்லாவிட்டால் யுத்தத்தை அத்தனை இலகுவாக முடித்திருக்கு முடியாது! -அட்மிரல் சரத் வீரசேகர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கருணா கூறியதை அலட்டிக்கொள்ள தேவையில்லை; அவர் இல்லாவிட்டால் யுத்தத்தை அத்தனை இலகுவாக முடித்திருக்கு முடியாது! -அட்மிரல் சரத் வீரசேகர

Karuna Amman


யுத்த காலத்தில் 2000 தொடக்கம் 3000 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரை கொன்றதாக   முன்னாள் பாராளுமன்ற  உறுப்பின கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளமை ஒன்றும் பாரதூரமான விடயமல்ல.

தமிழீழ விடுதலை புலிகள்  தொடர்பான  இரகசிய  தகவல்களை இவர் இறுதியில் வழங்கியதன் காரணமாகவே யுத்தத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் ஆணையிறவு பகுதியில் 2000 தொடக்கம் 3000 இராணுவத்தினரை கொன்றதாக கருணா அம்மான் குறிப்பிட்ட செய்தி தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவா று குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்த  காலத்தில் இரண்டு தரப்பிலும் படையினர் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினால் விடுதலை புலிகள் அமைப்பினர் யுத்த களத்தில் கொல்லப்பட்டார்கள்.

இராணுவத்தினருக்ககு எதிராகவும் புலிகள் அமைப்பு  பல்வேறு வழிமுறைகள் ஊடாக  தாக்குதல்களை முன்னெடுத்தார்கள். யுத்த காலத்தில் கருணா அம்மான் கிழக்கு மாகாண படைத்தளபதி பொறுப்பாளராக செயற்பட்டார். இதன் போதே இத்தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம்.

கருணா அம்மான் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கினார் இதன் பின்னரே இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில்  இவர் பல்வேறு இரகசிய தகவல்களை அரசாங்கத்தற்கு வழங்கினார். இவர் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இறுதிக்கட்ட யுத்தம் குறுகிய காலத்தில் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

ஆகவே தற்போது இவர் குறிப்பிட்டுள்ள கருத்து இராணுவத்தில் உயிர்நீத்தவர்களின் உறவுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.

இவ்வாறான  கருத்துக்களை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இறுதிக்கட்ட யுத்தத்தை  மிக விரைவில் நிறைவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற தேவை காணப்பட்டதால். இவரது உதவியை அப்போது பெற்றுக் கொண்டோம்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இரண்டு தரப்பிலும் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. யுத்தத்தை நோக்கி பயணிக்கையில் இழப்புக்களை நிச்சயித்துக் கொள்ளவேண்டும் என்பது இராணுவத்தினருக்கு சாதாரண ஒரு விடயமாகும். 30 வருட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு  வந்ததன் காரணமாகவே இன்று தமிழ் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.