எனினும் பயண கட்டுப்பாடுகள் காரணமாக கொழும்பிற்கு வர முடியாத நிலையில் வீடியோ அழைப்பிலேயே இந்த பெண் திருமணம்செய்துக் கொண்டுள்ளார் . நதீக்கா - கயான் என்ற இந்த இலங்கை தம்பதி பல ஆண்டுகளாக திருமணம் செய்வதற்குஎதிர்பார்த்திருந்தனர்.
எனினும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு மத்தியில்தீர்மானிக்கப்பட்ட திகதியில் குறித்த இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். நதீக்கா டுபாயில் உள்ள நிலையில் அவர்திருமணம் செய்யவிருந்தவர் கொழும்பில் இருந்தார். இதன் காரணமாக ஜுன் மாதம் 10 ஆம் திகதி இலங்கை கலாச்சாரத்திற்கமையநண்பர்கள் மற்றும் உறவினர்களை Zoom அழைப்பில் அழைக்கப்பட்டு திருமணம் செய்யப்பட்டுள்ளது. கலாச்சார முறைக்கமையதிருமணம் முடிந்தவுடன், டுபாயில் உள்ள கயானின் வீட்டிற்கு நதீக்கா சென்றுள்ளார்.