
அவர்கள் 21 நாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காகஅனுப்பப்பட்டனர்.
நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 95,087 ஆகும். கடந்த 20 ஆம் திகதி மட்டும் 827 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் எவரும் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்படவில்லை என்றுசுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரை 20 ஆம் திகதி முதல் எந்தவொரு தொற்றாளர்களும் பதிவாகவில்லை.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இப்போது 1,498 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் 1,950 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 441 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.