
கண்டெடுக்கப்பட்ட குழந்தை ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டது.
நேற்று (21) இரவு அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் பாழடைந்த இடமொன்றில் பெண் ஒருவரினால் குழந்தையை ஒரு வெள்ளைத்துணியால் போர்த்தி மின் கம்பத்தின் அருகே வைக்கப்பட்டிருந்ததை பிரதேசவாசிகள் கண்டெடுத்துள்ளனர்.
குழந்தை தற்போது ஹம்பாந்தோட்டா மருத்துவமனை குழந்தை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது.
குழந்தையினை வைத்து விட்டு சென்ற பெண்ணினை கண்டுபிடிக்க அம்பலந்தோட்டை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.