கருணா அம்மானினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் குறித்து , அவர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பிலே இவ்வாறு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது .
தாம் கொரோனாரவ விட அபாயம் மிக்கவன் தான் - விடுதலை புலிகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் காலத்தில் 2 அல்லது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவவீரர்களை ஆணையிரவு முகாமிலும், கிளிநொச்சி முகாமிலும் கொன்றுள்ளேன் என அம்பாறை நாவிதன்வெளி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து தெரிவித்தார். இது தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.