
நேற்று மாலை வரை ஒரு பவுண் தங்கத்தின் விலை 20 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அதிகார சபையின் இயக்குனர் இந்தியபண்டார குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கடந்த 12 ஆம் திகதி முதல் 10000 ரூபாய்வரையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை இதற்கு பிரதான காரணமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாபரவல் கட்டுப்படுத்தப்பட்டால் தங்கத்தின் விலைக்கு நிலையான விலை கிடைக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.